அதிவேக 5ஜி வழங்க தயாராகும் ஆப்பிள்

அதிவேக 5ஜி வழங்க தயாராகும் ஆப்பிள்

அதிவேக வயர்லெஸ் தொழில்நுட்பத்தை உருவாக்க ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதன்படி மில்லிமீட்டர் அலைகற்றை வயர்லெஸ் தொழில்நுட்பத்தில் சோதனை செய்ய ஆப்பிள் நிறுவனம் சார்பில் அனுமதி கோரப்பட்டுள்ளது. புதிய தொழில்நுட்பம் நெட்வொர்க் பேண்ட்வித் மற்றும் வேகத்தை அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்பிள் பதிவு செய்துள்ள விண்ணப்பத்தில் சோதனைகள் சார்ந்து அதிகபட்ச தகவல்கள் இடம்பெறவில்லை என்றாலும், இந்த சோதனைகளின் மூலம் எதிர்கால 5ஜி நெட்வொர்க்களில் சாதனங்கள் எவ்வாறு வேலை செய்யும் என்பது சார்ந்த தகவல்களை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது சார்ந்த சோதனைகளை சிலிகான் வேலியின் மில்பிடாஸ் மற்றும் அந்நிறுவனத்தின் தலைமையகம் என இரண்டு வெவ்வேறு இடங்களில் நடத்த ஆப்பிள் திட்டமிட்டுள்ளது. எதிர்கால 5ஜி நெட்வொர்க்களை சப்போர்ட் செய்யும் வகையில் ஐபோன்களை தயார் செய்வது மட்டுமின்றி பல்வேறு இதர சோதனைகளையும் ஆப்பிள் மேற்கொள்ள இருக்கிறது.

ஆப்பிள் நிறுவனம் முதலில் 28 ஜிகாஹெர்ட்ஸ் பேண்ட்களில் சோதனை செய்ய இருப்பதாகவும், இவற்றை கொண்டு பூமியில் இருந்து விண்வெளிக்கு தகவல் பரிமாற்றம் செய்ய முடியும் என்றும் கூறப்படுகிறது. முன்னதாக ஆப்பிள் நிறுவனம் கூகுளில் பணியாற்றி வந்த ஊழியர்களை பணியில் சேர்த்து புதிய வன்பொருள் குழுவினை உருவாக்கியது.

இந்த குழவினர் ஸ்பேஸ் எக்ஸ் போன்று செயற்கைக்கோள் சார்ந்த நெட்வொர்க்களை உருவாக்கும் என்றும் கூறப்படுகின்றது. எனினும் இது குறித்து ஆப்பிள் சார்பில் எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை.

Leave a Reply