அனுஷ்கா, அஞ்சலி, ஷாலினி பாண்டே நாயகிகளாக நடிக்கும் படத்தில் மாதவன்
நடிகர் மாதவன் நடிக்கவுள்ள அடுத்த படத்தில் அனுஷ்கா, அஞ்சலி மற்றும் ஷாலினி பாண்டே ஆகிய மூன்று நாயகிகள் நடிக்கவிருப்பதாகவும் இதுவொரு அதிரடி ஆக்சன் படம் என்றும் கூறப்படுகிறது
மாதவன் இயக்கி நடித்து வந்த ‘ராக்கெட்டரி’ திரைப்படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்து விரைவில் இந்த படம் வெளியாகவிருக்கும் நிலையில் மாதவனின் அடுத்த படத்தை ஹேமந்த் மதுல்கர் என்பவர் இயக்கவுள்ளதாகவும் இந்த படம் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகவிருப்பதாகவும் தெரிகிறது
அனுஷ்கா, அஞ்சலி மற்றும் ஷாலினி பாண்டே ஆகிய மூவருமே இந்த படத்தின் நாயகிகள் என்றாலும் இவர்களில் யார் மாதவனுக்கு ஜோடி என்பதை இயக்குனர் சஸ்பென்ஸ் ஆக வைத்துள்ளார்.
இந்த படத்தை கிரண் ஸ்டுடியோஸ், காஸ்மோஸ் எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் பீப்பிள் மீடியா பேக்டரி ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கவுள்ளன.