அனைவரும் வாக்களிப்பது கட்டாயம் வழக்கில் சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு

அனைவரும் வாக்களிப்பது கட்டாயம் வழக்கில் சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு

பொதுத்தேர்தலில் வாக்களிப்பதை கட்டாயமாக்க கோரிய மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த மனுவிற்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், 4 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

பொதுத்தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பது ஜனநாயக உரிமை என்றாலும் வாக்காளர்கள் வாக்களிக்க இன்னும் போதுமான வசதிகளை தேர்தல் ஆணையம் செய்து தருவதில்லை. ஓட்டு போடுவதற்காக 500 முதல் 100 கிலோ மீட்டர் பயணம் செய்ய வேண்டிய நிலை பலருக்கு உள்ளது.

எந்த தொகுதி ஓட்டையும் எங்கிருந்து வேண்டுமானாலும் பதிவு செய்யலாம் என்பது உள்பட பல வசதிகளை தேர்தல் ஆணையம் கொண்டு வந்த பின்னரே இதுபோன்ற கட்டாயம் சட்டமெல்லாம் இயற்றுவது பொருத்தமாக இருக்கும் என நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர்

Leave a Reply