அன்புச்செழியன் உத்தமர், அவரை தவறாக சித்தரிக்க வேண்டாம்: சீனுராமசாமி
பிரபல பைனான்சியர் அன்புசெழியன் மிரட்டியதன் காரணமாக சசிகுமாரின் உறவினர் அசோக்குமார் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டர். அவரின் உடல் சொந்த ஊரான மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டு நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு ஏராளமான திரை பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர்.
நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால் மதுரையில் நடந்த அசோக்குமாரின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டு ஆறுதல் தெரிவித்தார். மேலும், சசிகுமார், சுசிந்திரன் உள்ளிட்ட பலர் அன்புச்செழியனுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், சீனு ராமசாமி பைனான்சியர் அன்புச்செழியன் உத்தமர் என்று கூறியிருக்கிறார். இது குறித்து சீனு ராமசாமி தனது டுவிட்டர் பக்கத்தில், ‘எம்.ஜி.ஆர், சிவாஜி, போல் இல்லை இன்றைய நடிகர்கள். அன்பு செழியன் போன்ற உத்தமர்கள் ஏனோ தவறாக சித்தரிக்கப்பவது வேதனை. நான் நியாயத்தின் பக்கமே…’ என்று பதிவு செய்திருக்கிறார்.
திரையுலகமே அன்புசெழியனுக்கு எதிராக கருத்து தெரிவித்து வரும் நிலையில், இயக்குனர் சீனு ராமசாமி அவருக்கு ஆதரவாக டுவிட் செய்திருப்பது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
https://twitter.com/seenuramasamy/status/933505735350140928