அபராதம் கேட்டால் தற்கொலை செய்து கொள்வேன்: இளம்பெண் மிரட்டியதால் போக்குவரத்து போலீசார் அதிர்ச்சி
புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி வாகன ஓட்டிகளிடம் போக்குவரத்து போலீசார் கடும் கெடுபிடிகள் செய்து வருவது தெரிந்ததே
வாகனங்கள் ஓட்டும்போது சிறு தவறு செய்தாலும், போக்குவரத்து விதிகளை மீறினாலும், ஆவணங்களை சரியாக வைத்திருக்காவிட்டாலும் ஆயிரக்கணக்கில் அபராதம் கட்ட வேண்டிய நிலை ஏற்படுகிறது
இந்த நிலையில் டெல்லியில் உள்ள ஒரு இளம்பெண் தனது இருசக்கர வாகனத்தில் சென்றபோது போக்குவரத்து போலீசார் அவரை வழிமறித்தனர். அந்தப் பெண்ணிடம் சரியான ஆவணங்கள் இல்லை, மேலும் அவர் ஹெல்மெட்டையும் சரியாக அணிந்திருக்கவில்லை
அதுமட்டுமின்றி அவர் வாகனம் ஓட்டும் போது தனது மொபைல் போன் மூலம் பாடல்கள் கேட்டு வந்துள்ளார். இந்த அனைத்து குற்றங்களையும் சேர்த்து அவரிடம் சுமார் பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்க போலீசார் திட்டமிட்டனர்
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் போலீசாரிடம் பல்வேறு விதமாக வாக்குவாதம் செய்து பார்த்தார் அவருடைய வாக்குவாதம் கொஞ்சம் கூட எடுபடவில்லை
எனவே கடைசியாக தனது அஸ்திரத்தை பயன்படுத்திய அந்த இளம்பெண் அபராதம் கேட்டால் இதே இடத்தில் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டினார்.,
தற்கொலை மிரட்டல் மட்டுமின்றி கைப்பையில் வைத்திருந்த விஷ பாட்டிலை எடுத்து குடிக்க போகிறேன் என்று மிரட்டியுள்ளார் இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் அந்த சமாதானம் செய்து அபராதம் பெறாமல் அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது