அபராதம் செலுத்த பணம் இல்லை. உலகையே துறந்துவிட்டேன். ராம்ரஹிம்சிங் நீதிமன்றத்தில் பதில்
பாலியல் குற்றச்சாட்டு வழக்கு ஒன்றி தேரா சச்சா அமைப்பின் தலைவர் ராம் ரஹிம் சிங்கிற்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.30 லட்சம் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த நிலையில் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் ராம்ரஹிம் தான் எல்லாவற்றையும் துறந்துவிட்டதாகவும், தன்னிடம் அபராதம் செலுத்த பணம் இல்லை என்றும் கூறியுள்ளார். எனினும் அபராதத்தை செலுத்த நீதிமன்றம் கெடு விதித்துள்ளது.
ராம் ரஹிம் சிங்கின் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது அவரது வழக்கறிஞர் கார்க் நர்வானா என்பவர் வாதாடியபோது, ‘தேரா சச்சா தலைவர் குர்மீத் சிங் நீதிமன்ற அபராதத் தொகையைச் செலுத்த முடியாத நிலையில் உள்ளார். ஏனெனில் அவர் இந்த உலகத்தையே துறந்துவிட்டார்’ என்று கூறினார். ஆனால் நீதிமன்றம் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆடம்பர வாழ்க்கையுடன் கோடியில் புரண்ட சாமியார் ராம்ரஹிம் ரூ.30 லட்சம் இல்லை என்று கூறியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.