அபிநந்தனை விடுதலை செய்யுங்கள்: முன்னாள் பாக் பிரதமர் பூட்டோவின் பேத்தி வலியுறுத்தல்
தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் அபிநந்தனை பாகிஸ்தான் ராணுவம் கைதுசெய்து அவரது வீடியோவையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அவரை மீட்க இந்தியா ஆலோசனை செய்து வருகிறது
இந்த நிலையில் இந்திய விமானியை விடுவிக்குமாறு பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் சுல்ஃபிகர் அலி பூட்டோவின் பேத்தியும், எழுத்தாளருமான ஃபாத்திமா பூட்டோ வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: ‘ஒரு தலைமுறையே போரில் கழிந்து விட்டது. இதற்கு மேல் பாகிஸ்தான் மற்றும் இந்திய இராணுவ வீரர்கள் உயிரிழப்பதை நான் பார்க்கக் கூடாது. துணைக்கண்டம் முழுவதுமே அனாதைகளாக மாறுவதை ஏற்க முடியாது
இன்றைய தலைமுறை பாகிஸ்தானியர்கள் அமைதியை தான் விரும்புவதாகவும், அது குறித்து குரல் கொடுப்பதற்கு அவர்கள் தயங்குவதில்லை எனவும் ஃபாத்திமா பூட்டோ குறிப்பிட்டுள்ளார். போர் வேண்டாம் என்பது தொடர்பான ஹேஸ்டேக்குகள் பாகிஸ்தானில் அதிகம் பகிரப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.