அபிராமியை டார்ச்சர் செய்த மீரா: பழிக்கு பழியா?
பிக்பாஸ் வீட்டில் நேற்று மீராமிதுன் அனைவருக்கும் ரேம்வாக் சொல்லி கொடுக்க வேண்டும் என்ற டாஸ்க் கொடுக்கப்பட்ட நிலையில் மற்றவர்களுக்கு சாதாரணமாக ரேம்வாக் சொல்லி கொடுத்த மீரா, அபிராமியை மட்டும் டார்ச்சர் செய்து தனது பழியை தீர்த்து கொண்டதாக தெரிகிறது
மேலும் தன்னிடம் மன்னிப்பு கேட்க வந்த அபிராமியை கூட, தான் அபிராமியை இன்னும் நம்பவில்லை என்றும், ஒருவர் திருந்தி மன்னிப்பு கேட்பதற்கும், ஃபார்மாலிட்டிக்கு மன்னிப்பு கேட்பதற்கும் உள்ள வித்தியாசம் தனக்கு தெரியும் என்றும் தெரிவித்தார்.
மீராவின் இந்த நடவடிக்கையால் ஏற்கனவே அவர் மீது வெறுப்பில் உள்ள அபிராமி தற்போது மேலும் கடுப்பாகியுள்ளதாக தெரிகிறது