அபுதாபி மசூதிக்கு சென்ற பிரதமர் இந்தியாவில் உள்ள மசூதிக்கு செல்வாரா?
பாரத பிரதமர் இரண்டு நாள் பயணமாக அபுதாபியில் அரசுமுறை சுற்றுப்பயணம் செய்த வேளையில் அங்குள்ள மசூதிக்கு சென்று அங்குள்ள வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டார். இதுகுறித்து அனைத்திந்திய முஸ்லிம் சட்ட வாரியம் கருத்து தெரிவித்தபோது, “ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள மசூதிக்கு செல்வதற்கு முன்னால் இந்தியாவில் உள்ள மசூதி ஒன்றிற்கு பிரதமர் மோடி வருகை தந்திருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளது.
அனைத்திந்திய முஸ்லிம் சட்ட வாரிய பொதுச் செயலர் மவுலானா மொகமது வாலி ரெஹ்மானி போபாலில் இன்று செய்தியாளார்கள் கூட்டத்தில் பேசியபோது, “”ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள மசூதிக்குச் செல்வதற்கு முன்பாக நம் நாட்டில் உள்ள மசூதி ஒன்றிற்கு மோடி சென்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும்” என்று கூறினார்.
இவருடைய கருத்தை பெரும்பாலான மற்ற முஸ்லீம் அமைப்புகளும் ஆதரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.