அப்பல்லோவில் சிகிச்சை பெற்ற ஜெயலலிதாவின் வீடியோ: தினகரன் தரப்பு வெளியீட்டதால் பரபரப்பு

அப்பல்லோவில் சிகிச்சை பெற்ற ஜெயலலிதாவின் வீடியோ: தினகரன் தரப்பு வெளியீட்டதால் பரபரப்பு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்பல்லொ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோதே இறந்துவிட்டார் என்றும், அவருடைய கால்கள் அகற்றப்பட்டதாகவும் பல்வேறு வதந்திகள் கடந்த ஒரு வருடமாக வெளியாகி கொண்டிருந்த நிலையில் தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் சற்றுமுன்னர் திடீரென ஜெயலலிதா அப்பல்லோவில் சிகிச்சை பெற்றபோது எடுக்கப்பட்ட வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்

இந்த வீடியோவில் ஜெயலலிதா மருத்துவமனையில் படுத்து கொண்டே பழச்சாறு அருந்துவது போல் உள்ளது. ஒருசில வினாடிகளே ஓடும் இந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஜெயலலிதாவின் மரணம் குறித்த பல வதந்திகளுக்கு இந்த வீடியோ முற்றுப்புள்ளி வைத்துவிட்டதாக கருதப்படுகிறது.

மேலும் ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது அமைச்சர்கள் பேசிய வீடியோக்களும் தங்களிடம் உள்ளதாகவும், தேவைப்பட்டால் அவைகளையும் வெளியிட தயங்க மாட்டோம் என்றும் வெற்றிவேல் தெரிவித்துள்ளார்

Leave a Reply