அப்பாடா… ஒரு வழியா சென்னை அண்ணா சாலைக்கு விமோசனம் வந்துருச்சு
சென்னை மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக சென்னை அண்ணா சாலையில் உள்ள வெலிங்டன் சந்திப்பில் இருந்து ஆயிரம் விளக்கு பேருந்து நிறுத்தம் வரை ஒருவழிப்பாதையாக இருந்த நிலையில் 7 ஆண்டுகளுக்கு பின் தற்போது நாளை முதல் மீண்டும் இருவழிப்பாதையாக மாறவுள்ளது. இதுகுறித்து காவல்துறை வெளியிட்ட அறிக்கையின் விபரம் பின்வருமாறு
தற்போது அண்ணா சாலையில் மெட்ரோ ரயில் பணிகள் முடிவடைந்த நிலையில் அண்ணா சாலை மற்றும் ஜி.பி.ரோடு முதல் அண்ணா சாலை மற்றும் ஒயிட்ஸ் ரோடு வரை மீண்டும் இருவழிப்பாதையாக மாற்றப்பட உள்ளது.
அதற்கான சோதனை ஓட்டம் நாளை (11.9.2019) மற்றும் 12.09.2019 ஆகிய தேதிகளில் சென்னை பெருநகரப் போக்குவரத்து காவல்துறையினரால் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. மேற்கண்ட நாட்களில் அனைத்து வாகன ஓட்டிகளும் கீழ்கண்ட போக்குவரத்து மாற்றங்களை நடைமுறைப்படுத்த ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்டுகிறார்கள்.
1. அண்ணா சாலையில் ஒயிட்ஸ் ரோடு சந்திப்பில் இருந்து வெலிங்டன் சந்திப்பு வரை இருவழிப்பாதையாக மாற்றப்படுகிறது.
2. தற்போது ஜி.பி.ரோட்டில் நடைமுறையில் உள்ள ஒருவழிப்பாதை மாற்றியமைக்கப்பட்டு, ராயப்பேட்டை மணிக்கூண்டில் இருந்து வாகனங்கள் வெலிங்டன் சந்திப்பு நோக்கி அனுமதிக்கப்படுகிறது. மாறாக வெலிங்டன் சந்திப்பில் இருந்து ராயப்பேட்டை மணிகூண்டு வரை வாகனங்கள் செல்லத் தடை செய்யப்படுகிறது.
3. ஒயிட்ஸ் ரோடு இருவழிப்பாதையாக மாற்றப்படுகிறது.
4. ராயப்பேட்டையில் மணிக்கூண்டில் இருந்து வரும் வாகனங்கள் அண்ணா சாலை நோக்கியும், அண்ணா சாலையில் இருந்து வரும் வாகனங்கள் ராயப்பேட்டை மணிக்கூண்டை நோக்கியும் ஒயிட்ஸ் ரோட்டில் அனுமதிக்கப்படுகிறது.
5. ஸ்மித் ரோடு ஒரு வழிப்பாதையாகவே முன்பு இருந்தது போன்றே ஒயிட்ஸ் ரோடு சந்திப்பில் இருந்து அண்ணாசாலை செல்ல அனுமதிக்கப்படுகிறது.
6. அண்ணா மேம்பாலத்தில் இருந்து அண்ணா சிலை நோக்கி வரும் வாகனப் போக்குவரத்தில் எவ்வித மாற்றமும் இல்லை.
7. அண்ணா சிலையில் இருந்து ஜெமினி அல்லது தேனாம்பேட்டை நோக்கிச் செல்லும் வாகனங்கள் எல்.ஐ.சி மற்றும் டி.வி.எஸ். வழியாக அண்ணா மேம்பாலம் நோக்கிச் செல்லலாம்.
8. அண்ணா சிலையில் இருந்து பின்னி சாலை நோக்கி செல்லும் வாகனங்கள் ஸ்பென்சர் சந்திப்பில் வலதுபுறம் செல்லலாம்.
9. பாரதி சாலையில் இருந்து வரும் வாகனங்கள் ஜி.பி.ரோடு மற்றும் ஒயிட்ஸ் ரோடு வழியாக அண்ணா சாலை சென்றடையலாம்.
10. ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் இருந்து (வெஸ்ட் காட் ரோடு) அண்ணா சாலை நோக்கிச் செல்லும் வாகனங்கள் ராயப்பேட்டை மணிக்கூண்டு அடைந்து ஒயிட்ஸ் ரோடு மற்றும் ஜி.பி.ரோடு வழியாகச் செல்லலாம்.
11. பின்னி சாலையில் இருந்து வரும் வாகனங்கள் ஸ்பென்சர் சந்திப்பில் வலதுபுறம் திரும்பி அண்ணா சாலை மற்றும் அண்ணா மேம்பாலம் செல்லலாம்.
12. பின்னி சாலையில் இருந்து பாரதி சாலை செல்ல அண்ணா சாலை பட்டுலாஸ் சாலை வழியாகச் சென்று இடதுபுறம் திரும்பி ஒயிட்ஸ் ரோடு மற்றும் ராயப்பேட்டை மணிக்கூண்டு வழியாகச் செல்லலாம்.
13. பின்னி சாலையில் இருந்து ஒயிட்ஸ் ரோடு செல்லும் வாகனங்கள் ஸ்பென்சர் சந்திப்பில் வலதுபுறம் திரும்பி அண்ணா சாலை பட்டுலாஸ் சாலை வழியாகச் சென்று ஒயிட்ஸ் ரோட்டிற்குச் செல்லலாம்.
14. கிரீம்ஸ் சாலையில் இருந்து அண்ணா மேம்பாலம் நோக்கிச் செல்ல வேண்டிய வாகனங்கள் அண்ணா சாலை மற்றும் ஒயிட்ஸ் சாலை சந்திப்பில் யூ டர்ன் மற்றும் ரைட் டர்ன் எடுத்து அண்ணா மேம்பாலம் மற்றும் ஒயிட்ஸ் சாலை செல்லலாம்.
15. அண்ணா சாலையில் இருந்து ஸ்மித் ரோடு வழியாக ஒயிட்ஸ் ரோடு செல்லத் தடை செய்யப்பட்டுள்ளது.
16. ஒயிட்ஸ் சாலையில் இருந்து அண்ணா சாலை செல்லும் வாகனங்கள் திரு.வி.க. சாலையில் இடதுபுறம் திரும்பி பின்னர் சத்யம் தியேட்டர், கான்டான் சுமித் சாலை சந்திப்பு, பீட்டர்ஸ் சாலை வழியாக அண்ணா சாலையை அடையலாம்”.
இவ்வாறு போக்குவரத்துக் காவல்துறை தெரிவித்துள்ளது.