அமமுகவில் இருந்து விலகினார் இசக்கி சுப்பையா! அதிமுகவில் இணைகிறாரா?
அமமுகவில் இருந்து ஒவ்வொரு நிர்வாகிகளாக வெளியேறிவரும் நிலையில் இன்று முன்னாள் அமைச்சரும் அமமுகவின் தென் சென்னை வேட்பாளராக களம் இறங்கிய இசக்கி சுப்பையா அமமுகவில் இருந்து வெளியேறியுள்ளார். அவர் விரைவில் ஓபிஎஸ், ஈபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணையவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது
தற்போது அமமுக அலுவலகம் இசக்கி சுப்பையாவுக்கு சொந்தமான கட்டிடத்தில் தான் இயங்கி வருகிறது. சமீபத்தில் அக்கட்சியின் பதிவு பற்றி நாளிதழ்களில் வந்த விளம்பரத்தில் கூட இந்த கட்டிடத்தின் முகவரி தான் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இசக்கி சுப்பையா கட்சியில் இருந்து வெளியேறுவதால் அமமுகவின் கட்சி அலுவலகம் வேறு இடத்திற்கு மாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது