அமமுகவை கூட்டணியில் சேர்க்க வலியுறுத்திய பாஜக: மறுப்பு தெரிவித்த அதிமுக!

அதிமுக கூட்டணியில் அமமுகவையும் இணைத்துக்கொள்ள பாஜக வலியுறுத்தி வருவதாகவும் ஆனால் அதற்கு அதிமுக தலைமை மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது

அதிமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் கிட்டத்தட்ட கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் குறித்து முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

பாஜக 21 தொகுதிகளில் பாமக 23 தொகுதிகளில் தேமுதிக 10 தொகுதிகளில் தமாக இரண்டு புதிய தமிழகம் இரண்டு, ஜான்பாண்டியன் 1 மற்றும் ஏசி சண்முகம் 1 ஆகிய தொகுதிகள் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கியது போக அதிமுக 174 இடங்களில் போட்டியிட போவதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் அமமுகவையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தி வருவதாகவும் ஆனால் இதற்கு அதிமுக உறுதியாக மறுப்பு தெரிவித்து விட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன

Leave a Reply