அமமுக ஒரு லெட்டர்பேட் கட்சி: போட்டுத்தாக்கிய அமைச்சர் ஜெயகுமார்
எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா மீது பாசம் கொண்டவர்கள் அதிமுகவுக்கு திரும்ப வேண்டும் என்றும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்பது ஒரு கட்சியே கிடையாது அதுவொரு குழு என்றும் இன்னும் லெட்டர் பேடு கட்சியை நம்பி ஏமாற வேண்டும் என்றும் அமமுகவினர்களுக்கு அமைச்சர் ஜெயகுமார் அழைப்பு விடுத்துள்ளார்.
அமமுகவில் இருந்து நேற்று பலர் துணை முதல்வர் ஓபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த நிலையில் மேலும் சிலரை இழுக்கவே அமைச்சர் ஜெயகுமார் இவ்வாறு கூறியதாக தெரிகிறது