அமலாபாலுக்கு வாழ்த்து தெரிவித்த பிரபல நடிகர்
நடிகை அமலாபால் நடித்த ஆடை திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில் இந்த படத்திற்கு ஊடகங்கள் பாசிட்டிவ் விமர்சனத்தை கொடுத்தது என்பது தெரிந்ததே
அதுமட்டுமின்றி வசூலிலும் இந்தப்படம் கடந்த இரண்டு வாரங்களில் ஒரு பெரிய தொகையை விநியோகிஸ்தர்களுக்கு கொடுத்துள்ளது.
இந்த நிலையில் நடிகர் விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் அமலாபாலின் போல்டான நடிப்புக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆடை படத்தில் அவருடைய நடிப்பு மிகவும் சிறப்பாகவும் துணிச்சலாகவும் இருந்தது என்றும் அவருக்கு தனது வாழ்த்துக்கள் என்றும் தெரிவித்துள்ளார்
Hearing great things about #Aadai & I would like to congratulate Dearest Amala @Amala_ams for the bold attempt & acting in #Aadai
— Vishal (@VishalKOfficial) July 26, 2019