அமுல் மீது வழக்கு தொடர்ந்தது ஹிந்துஸ்தான் யூனிலிவர்: உறைந்த இனிப்புகளுக்கு எதிராக விளம்பரம்
அமுல் நிறுவனத்தின் புதிய விளம்பரத்திற்கு எதிராக ஹிந்துஸ்தான் யூனிலிவர் நிறுவனம் மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அமுல் நிறுவனத்தின் புதிய விளம்பரம் அனைத்து தொலைக் காட்சிகளிலும் வெளியானது. ஐஸ் கிரீம் குறித்த இந்த விளம்பரத்தில், அமுல் நிறுவனத்தின் ஐஸ்கிரீம் வகைகளை நுகர்வோர்கள் வாங்க வேண்டும் என்பது போல் கூறப் பட்டிருந்தது. அதுமட்டுமல்லாமல் வெறும் உறைந்த இனிப்பு வகை களை நுகர்வோர்கள் வாங்க வேண்டாம். அவை வெறும் தாவர சமையல் எண்ணெய் கலந்து தயா ரிக்கப்பட்டுள்ளது. அவை உடலுக்கு நல்லதல்ல என்று கூறும் வகையில் அந்த விளம்பரம் இருந்தது.
இந்த விளம்பரத்தை தடை செய்ய வேண்டும் என்று ஹிந்துஸ் தான் யூனிலிவர் நிறுவனம் மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. ஹிந்துஸ்தான் நிறுவனத்துடன் வாதிலால் குழுமமும் அமுல் நிறுவனத்திற்கு எதிராக இறங்கியுள்ளது.
இதுகுறித்து அமுல் நிறு வனத்தின் நிர்வாக இயக்குநர் ஆர்.எஸ்.சோதி கூறியதாவது: ஹிந்துஸ்தான் யூனிலிவர் வழக்கு தொடர்ந்திருப்பது மிகப் பெரிய நாடகம். இந்த நிறுவனம் உறைய வைக்கப்பட்ட இனிப்பு வகைகளைத் தயாரித்து வருகிறது. இதற்கு சவால் விடும் வகையில்தான் எங்களது விளம்பரம் இருந்தது. ஐஸ்கிரீம் மற்றும் இனிப்பு வகைகளுக்கும் இடையே வித்தியாசத்தை எடுத்து சொல்வதும் நுகர்வோர்கள் மத்தியில் உண்மையான ஐஸ்கிரீம் குறித்து விழிப்புணர்வையும் எடுத்துரைப்பதே எங்கள் புதிய விளம்பரத்தின் நோக்கம்.
ஹிந்துஸ்தான் நிறுவனம் எங் களை அடிபணிய வைப்பதற்காக வழக்கு தொடர்ந்திருக்கிறது. ஆனால் எங்களுக்கு பின்னால் 36 லட்சம் ஏழை விவசாயிகள் இருப் பது அந்த நிறுவனத்திற்கு தெரிய வில்லை. அதுமட்டுமல்லாமல் கடந்த வருடம் இதேபோன்று பிரச் சினைக்காக துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்த போதும், ஹிந்துஸ்தான் யூனிலிவர் நிறுவனம் எங்களை இந்திய விளம்பர தர ஆணையத்திற்கு அழைத்துச் சென்றது. ஆனால் இந்திய விளம்பர தர ஆணையம் எங்களுக்கு சாதக மாகவே ஆணை பிறப்பித்தது. “அமுல் நிறுவனத்தின் விளம்பரம் ஒட்டுமொத்த உறைந்த இனிப்பு வகைகளை இழிவுப்படுத்தும் வகையில் இல்லை” என்று இந்திய விளம்பர தர ஆணையம் கூறியது.
ஐஸ்கிரீம் என்பது பாலில் இருந்து தயாரிக்கப்பபடுவது. ஆனால் உறைந்த இனிப்பு வகைகள் தாவர சமையல் எண்ணெயுடன் கொழுப்பு சேர்க்கப்பட்டு தயாரிக் கப்படுகிறது. இதை ஐஸ்கிரீம் என்று கூறமுடியாது. உணவு பாதுகாப்பு மற்றும் தர கட்டுப்பாடு ஆணையம் இந்த வகையை உறைந்த இனிப்புகள் என்று கூறுகின்றனர். நுகர்வோர்கள் ஐஸ்கிரீமா அல்லது உறைந்த இனிப்பு வகையா என் பதை அந்த பாக்கெட்டின் பின்புறம் பார்த்து உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றுதான் நாங்கள் கூறிவருகிறோம். அதேபோன்று வெண்ணெய்க்கும் செயற்கை வெண்ணெய்க்கும் இடையே உள்ள வித்தியாசத்தை எடுத்துரைக்கும் வகையிலும் அமுல் பிரச்சாரம் செய்து வருகிறது என்று ஆர்.எஸ்.சோதி தெரிவித்தார்.