அமெரிக்கரை காப்பாற்றிய இந்திய ராணுவம்
இமாச்சலப் பிரதேசத்தில் பாரா கிளைடிங் பயிற்சியின் போது 15,000 அடி உயரத்தில் உள்ள ஒரு பாறையில் சிக்கிக்கொண்ட அமெரிக்கர் ஒருவரை இந்திய ராணுவத்தினர் மீட்டுள்ளனர்.
இமாச்சலப் பிரதேச மாநிலம் கங்கரா மாவட்டதத்தில் பைஜ்நாத் பகுதியில் அமெரிக்காவைச் சேர்ந்த பேரி ராபர்ட்ஸ் என்பவர் பாரா கிளைடிங் எனப்படும் பறக்கும் பயிற்சிசை மேற்கொண்டார். அப்போது, உயரத்தில் பறந்த பாரா கிளைடர் எதிர்பாராத விதமாக, 15,000 அடி உயரத்தில் இருந்த பாறை ஒன்றில் சிக்கியது.
பயிற்சியில் ஈடுபட்ட ராபர்ட்ஸை காணாவில்லை என்று அவர் உடன் இருந்த மற்ற பயிற்சியாளர்கள் பலர் தரை வழியாக தேடியுள்ளனர். அவர் கிடைக்காததால், மரக்கிளைகள், மலையில் எங்கையாவது சிக்கியிருக்கலாம் என்று ராணுவத்தினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
ஹெலிகாப்டரில் விரைந்த இந்திய ராணுவத்தினர், தரையிலிருந்து சுமார் 15 ஆயிரம் அடி உயரத்தில் அமெரிக்கர் மாட்டிக் கொண்டதை கண்டுபிடித்தனர்.
அவரை பத்திரமாக மீட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக டெல்லி கொண்டு செல்லப்பட்டார்.