அமெரிக்காவின் கொலம்பியா மாவட்ட நீதிபதியாக இந்திய வம்சாவளி பெண் பதவி ஏற்றார்
அமெரிக்காவில் மாநில நீதிமன்றங்களும் மாவட்ட நீதிமன்றங்களும் தனிதனியாக இயங்கி வருகின்றன. இவ்விரு நீதிமன்றங்களிலும் வழங்கப்படும் தீர்ப்புகள் தொடர்பாக மேல் முறையீடு செய்ய மாநில அளவிலும் மாவட்ட அளவிலும் தனி நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன. சுப்ரீம் கோர்ட்டுக்கு அடுத்தப்படியாக மிகுந்த அதிகாரம் கொண்ட நீதிமன்றங்களாக மேல்முறையீடு நீதிமன்றங்கள் இங்கு உள்ளன.
இந்நிலையில் கொலம்பியா மாவட்ட மேல் முறையீடு, நீதின்மன்றத்தின் நீதிபதியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் வழக்கறிஞரான நியோமி ராவ் என்பவரின் பெயரை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முன் மொழிந்திருந்தார். இந்த நியமனத்துக்கு செனட் சபை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது.
இதைத்தொடர்ந்து கொலம்பியா மாவட்டத்தின் மேல்முறையீடு நீதிமன்ற நீதிபதியாக நியோமி ராவ் நேற்று வெள்ளை மாளிகையில் பதவி ஏற்றார். அவருக்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதி பிரட் கவானா பதவி பிரமானம் செய்து வைத்தார்.