அமெரிக்காவின் புதிய சிஐஏ இயக்குனராக பதவியேற்கும் முதல் பெண்

அமெரிக்காவின் புதிய சிஐஏ இயக்குனராக பதவியேற்கும் முதல் பெண்

அமெரிக்காவில் புதிய சிஐஏ இயக்குனராக பெண் ஒருவரை நியமனம் செய்ய அந்நாட்டு செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது

அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான சி.ஐ.ஏ. இயக்குனராக மைக் பாம்ப்பியோ இருந்து வந்த நிலையில் அவரை அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சராக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நியமனம் செய்தார்.

இந்த நிஅலியில் சி.ஐ.ஏ.வின் புதிய இயக்குனராக 61 வயதாகும் பெண் ஜினா ஹேஸ்பெல்லை அதிபர் நியமித்தார். அவரது நியமனத்துக்கு சில செனட் சபை உறுப்பினர்கள் முதலில் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இருப்பினும் ஜினா நியமனத்துக்கு நாடாளுமன்ற செனட் சபை நேற்று ஒப்புதல் கொடுத்துள்ளது. அதற்கான தீர்மானம் அமெரிக்க செனட் சபையில் நிறைவேறியது. ஜினா ஹேஸ்பெல் சி.ஐ.ஏ. இயக்குனராக பதவியேற்கும் முதல் பெண் ஆவார்.

Leave a Reply