அமெரிக்காவில் கைதான 129 இந்திய மாணவர்கள்: அதிர்ச்சி தகவல்

அமெரிக்காவில் கைதான 129 இந்திய மாணவர்கள்: அதிர்ச்சி தகவல்

அமெரிக்காவைல் தங்கியிருநது கல்வி பயின்று வரும் 129 இந்திய மாணவர்கள் விசா மோசடி செய்ததாக அமெரிக்க போலீசார்களால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவில் விசா மோசடிகள் அதிகரித்து வருவதை அடுத்து அதனை தடுப்பதற்கு போலிப் பல்கலைக்கழகம் ஒன்றை போலீசார் தொடங்கினர். இதில் பலரும் பதிவு செய்து விசா மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்தப் பல்கலைப்பழகத்தில் நடத்தப்படும் பாடங்கள் சட்டவிரோதமானவை என்று தெரிந்தும் அதில் பல மாணவர்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதைத்தொடர்ந்து போலிப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்த மாணவர்களை போலீசார் கைது செய்தனர். மொத்தம் 130 மாணவர்களை போலீசார் கைது செய்த நிலையில் அவர்களில் 129 பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட்ட இந்திய மாணவர்களை மீட்க மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. மேலும் கைதான மாணவர்களின் பெற்றோர்கள் தொடர்பு கொள்ள தனிப் பிரிவையும் வெளியுறவுத்துறை அமைச்சகம் ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply