அமெரிக்காவில் சாதனை செய்த 12 வயது இந்திய சிறுமி
அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் ஆங்கில சொற்களில் உள்ள பிழையை நீக்கும் போட்டி நடைபெறுவதுண்டு. இந்த போட்டியில் அமெரிக்கா மட்டுமின்றி உலகின் பல நாடுகளில் இருந்து சிறுவர், சிறுமியர் கலந்து கொள்வர். 6 முதல் 15 வயது வரையிலான சிறுவர், சிறுமிகள் கலந்து கொள்ளும் இந்த போட்டியில் இந்திய வம்சாவளியை சார்ந்த அனன்யா வினய் என்ற 12 வயது சிறுமி முதலிடத்தை பிடித்து சாதனை செய்துள்ளார்.
சுமார் 10 லட்சம் சிறுவர், சிறுமியர் கலந்து கொண்ட இந்த போட்டியில் ‘Marocain’ (பட்டு அல்லது கம்பளியால் செய்யப்பட்ட துணி) என்ற வார்த்தைக்கு எழுத்து பிழை கண்டு பிடித்து, சரியான சொல்லை கூறி முதலிடம் பிடித்தார். இவருக்கு $40,000 (ரூ. 25.79 லட்சம்) பரிசு வழங்கப்பட்டது.
கடந்த 13 ஆண்டுகளாக இந்த போட்டியில் இந்திய சிறுவர், சிறுமியர்கள் தான் முதலிடத்தை பெற்று வருகின்றனர். இந்த ஆண்டும் இந்திய சிறுமி வெற்றி பெற்றது பெருமைக்குரியதாக கருதப்படுகிறது. மேலும் இந்த போட்டியில் இரண்டாம் இடம் பெற்ற சிறுவனும் இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது.
https://www.youtube.com/watch?v=v3_b-uUUGSc