அமெரிக்காவில் 40வது ஆண்டு இரட்டையர் திருவிழா. கோலாகலமாக நடைபெற்றது.
[carousel ids=”69659,69660,69661,69662,69663,69664,69665,69666,69667,69668,69669,69670″]
அமெரிக்க நாட்டின், ஓஹியொ மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும் இரட்டையர் திருவிழா ‘டிவின்ஸ்பர்க்’ எனப்படும் நகரில் கொண்டாடப்படுவது வழக்கம். இதையொட்டி இவ்வருடமும் இந்த நகரில் இந்த திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டு திருவிழா வெற்றிகரமாக 40-ஆவது இரட்டையர் திருவிழா என்பது குறிப்பிடதக்கது. அமெரிக்கர்கள் மட்டுமின்றி கண்டங்கள் தாண்டியுள்ள ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து உட்பட பல்வேறு நாடுகளில் இருந்தும் நூற்றுக்கணக்கான இரட்டையர்கள் இந்த திருவிழாவில் பங்கேற்றனர்.
ஒரே பிரசவத்தில் பிறக்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளின் வாழ்க்கையைக் கொண்டாடும் விதமாக நாற்பது ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருவதே, இந்த திருவிழாவின் தனித்தன்மை. சின்னஞ்சிறு குழந்தைகள் முதல் முதியோர் வரை ஒரே மாதிரி உடைகளுடன், இந்த நகரத்தையே ஸ்தம்பிக்க வைத்தனர். இவர்கள் தமது சகோதர, சகோதரிகளுடன் பல்வேறு அலங்காரங்களுடன், வித்தியாசமான உடைகளிலும் அணிவகுத்தனர்.
இதில், இரட்டையர் மட்டுமின்றி ஒன்றாக பிறந்த மூன்று பேர் குழுக்களும் நான்கு பேர் குழுக்களும் கண்ணைக் கவரும் ஆடையணிந்து கலந்து கொண்டது காண்போர் உள்ளங்களை கவரும் விதத்தில் அமைந்திருந்தது.