அமெரிக்கா, இங்கிலாந்து வேண்டாம், தென்கொரியாவே எனது இலக்கு: பிரதமர் மோடி

அமெரிக்கா, இங்கிலாந்து வேண்டாம், தென்கொரியாவே எனது இலக்கு: பிரதமர் மோடி

நான் குஜராத்தின் முதல்வராக இருந்தபோது எல்லோரும் குஜராத்தை அமெரிக்கா போல், இங்கிலாந்து போல் மாற்ற வேண்டும் என்று கூறினார்கள். ஆனால் தென்கொரியாபோல் மாற்ற நினைத்தேன் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

உத்தராகண்ட் மாநிலத்தில் நடைபெறும் முதலீட்டாளர் மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடி பேசியதாவது: நமது நாட்டின் மாநிலங்கள் உலகின் பல நாடுகளை விட வலிமையானது. உலகில் உள்ள பல சிறிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இது சாத்திய. 2001ஆம் ஆண்டு நான் முதல் முறையாக குஜராத் முதலமைச்சரான போது, அரசாங்கம் என்றால் என்ன? என்ற அனுபவம் தனக்கு இல்லை

அதே நேரத்தில் குஜராத்தின் வளர்ச்சியில் தனது திட்டம் என்னவென்று? ஒரு செய்தியாளர் என்னிடம் கேட்டபோது, “நீங்கள் குஜராத்தை எப்படி மாற்றப்போகிறீர்கள் என்று யாரிடமாவது கேட்டால், அமெரிக்கா போல் மாற்றப்போகிறேன் அல்லது இங்கிலாந்து போல் மாற்றப்போகிறேன் என்பார்கள். ஆனால் நான் அப்போது தென்கொரியா போல குஜராத்தை மாற்ற நினைப்பதாக, பதிலளித்தேன்” என்று கூறினார்.

தென்கொரியாவுடன் ஒப்பிடுகையில் குஜராத் மக்கள் ஒரே எண்ணிக்கை தான் என்றும், அதே வளர்ச்சிப்பாதையில் சென்றால் குஜராத் வளர்ச்சியை தடுக்க முடியாது என்றும் நான் கூறினேன்’ இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்

Leave a Reply