அமெரிக்கா-கனடாவில் ஆச்சரியத்தை ஏற்படுத்திய ’24’ வசூல்
மூன்று வித்தியாசமான வேடங்களில் சூர்யா நடித்த ’24’ திரைப்படம் கடந்த 6ஆம் தேதி வெளியாகி தமிழகம் மட்டுமின்றி தெலுங்கு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்றது.
இந்நிலையில் இந்த படத்தின் அமெரிக்கா மற்றும் கனடா வசூல் பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது.
’24’ படம் வெளியான மே 6ஆம் தேதி முதல் கடந்த 15ஆம் தேதி வரையிலான 10 நாட்களில் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் சேர்த்து அமெரிக்காவில் 1,388,976 டாலர்களும் மற்றும் கனடாவில் 1,508,495 டாலர்களும் வசூல் செய்துள்ளது. இந்திய மதிப்பில் இந்த தொகை ரு.10.08 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
விக்ரம்குமார் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் சூர்யா, சமந்தா, நித்யாமேனன் நடிப்பில் உருவாகிய இந்த படம் வெற்றிப்படமாக விநியோகிஸ்தர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.