அமெரிக்க அதிபரின் அந்த 36 மணி நேரம்
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இரண்டு நாள் பயணமாக இன்று இந்தியாவுக்கு வரவிருக்கும் நிலையில் வரலாற்று சிறப்புமிக்க இந்த இந்த வருகையில் டிரம்ப் கலந்துகொள்ள இருக்கும் நிகழ்ச்சியின் பயணம் நிகழ்ச்சிகள் குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளன
இதன்படி முப்பத்தாறு மணி நேரம் இந்தியாவில் என்ன செய்யப் போகிறார் டிரம்ப் என்பது குறித்த முழுப் பயண விபரம் இதோ:
பிப்ரவரி 24:
காலை, 11:40 மணிக்கு டிரம்ப், மனைவி மெலனியா, ஆமதாபாத் வருகை
பகல், 12:15 மணி: மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரமம் செல்லுதல்
1:05 மணி: ஆமதாபாத் கிரிக்கெட் மைதானத்தில், ‘நமஸ்தே டிரம்ப்’ நிகழ்ச்சி
3:30 மணி: தாஜ்மஹாலை மனைவியுடன் பார்க்கின்றார் டிரம்ப்
இரவு, 7:30 மணி : டில்லி ஐ.டி.சி., மயூரா ஓட்டலில் தங்குதல்
பிப்ரவரி 25:
காலை, 10:00 மணி: டில்லி ராஷ்டிரபதி பவனில், டிரம்புக்கு வரவேற்பு
10:30 மணி: ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் அஞ்சலி
11:00 மணி: டில்லியில் இந்திய – அமெரிக்க உறவு குறித்து, பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை
பகல், 12:40 மணி : ஒப்பந்தங்கள் பரிமாற்றம், செய்தி வெளியீடு
இரவு, 7:30 மணி: இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்திக்கிறார் டிரம்ப்.
இரவு, 10:00 மணி: டில்லி விமான நிலையத்தில் இருந்து அமெரிக்கா புறப்படுகிறார் டிரம்ப்.