அமெரிக்க அதிபர் டிரம்பின் உள்நாட்டு பாதுகாப்பு ஆலோசகர் திடீர் ராஜினாமா
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பின்னர் அந்நாட்டின் உயரதிகாரிகள் அவ்வப்போது ராஜினாமா செய்து வரும் நிலையில் இன்று அமெரிக்க அதிபரின் உள்நாட்டு பாதுகாப்பு ஆலோசகர் டாம் பாஸ்சர்ட் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபரின் உள்நாட்டு பாதுகாப்பு ஆலோசகர் டாம் பாஸ்சர்ட் ராஜினாமா செய்துள்ளதை வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் சாரா சான்டர்ஸ் இன்று உறுதி செய்துள்ளார்.
பயங்கரவாதத்துக்கு எதிராக உள்நாட்டு பாதுகாப்பை நிலைநாட்டவும் நாட்டின் பாதுகாப்பு தொடர்பான சைபர் குற்றங்களை தடுக்கவும், ஏராளமான இயற்கை பேரழிவுகளில் திறம்பட செயலாற்றியும் மிக உயர்ந்த நாடான அமெரிக்காவுக்கு டாம் பாஸ்சர்ட் ஆற்றிய பங்களிப்பை அதிபர் டொனால்ட் டிரம்ப் நன்றியுடன் நினைவு கூர்ந்துள்ளதாக சாரா சான்டர்ஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது