அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பரில் நடைபெறவிருக்கும் நிலையில் ஒசாமா பின்லேடனின் மகள் டிரம்புக்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
இதுகுறித்து ஒசாமா பின்லேடனின் மருமகள் நூர் பில் லேடின் அளித்துள்ள பேட்டியில் கூறியபோது, ‘பயங்கரவாதிகளை வேரோடு ஒழிப்பதில் டிரம்ப் முன்மாதிரியாக திகழ்கிறார். வெளிநாட்டு பயங்கரவாதிகள் அச்சுறுத்தல்களிலிருந்து அமெரிக்காவையும் எங்களையும் டிரம்ப் திறம்பட காப்பாற்றி வருகிறார்’
ஜோ பைடன் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் செப்டம்பர் 11 தாக்குதலை போன்று மற்றொரு பயங்கரவாத தாக்குதலை அமெரிக்கா எதிர்கொள்ளக்கூடும்’ என்று தெரிவித்தார்.
அதிபர் தேர்தலில் 2015ல் டிரம்ப் போட்டியிடுவதாக அறிவித்த நாளிலிருந்து நான் டிரம்ப்பின் ஆதரவாளராக இருக்கிறேன் என்றும், அவரது உறுதியான அவரது தீர்மானங்களை பாராட்டுகிறேன் என்றும் அவர் மீண்டும் அதிபராக வேண்டும் என்றும் நூர் பில் லேடின் தெரிவித்துள்ளார்.