அமெரிக்க அதிபர் யார்? முடிவுக்கு கொண்டு வரப்பட்ட ட்ரம்ப், ஹிலாரி மோதல்

அமெரிக்காவின் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட்ட போது ட்ரம்ப்பை விட ஹிலாரிக்கே அதிக எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால் கனவுகளை பொய்யாக்கி ட்ரம்ப் ஆட்சிபீடம் ஏறினார். அதன் பின்பு மோதல்கள் வெடிக்கத் தொடங்கின. குறிப்பாக அமெரிக்க மக்கள் ட்ரம்ப்பிற்கு எதிராக அமெரிக்காவில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

இதேவேளை அமெரிக்காவின் பென்சில்வேனியா உள்ளிட்ட, சில மாகாணங்களில், அவர் குறைவான ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இதனால் விஸ்கான்சின் மற்றும் பென்சில் வேனியா மாகாணங்களில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்று கிரீன் கட்சி வேட்பாளர் கோரிக்கை விடுத்தார்.

அதை தொடர்ந்து விஸ்கான்சின் மாகாணத்தில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டது. அதில் டிரம்ப் ஹிலாரி கிளிண்டனை விட 23 ஆயிரம் ஓட்டுகள் அதிகமாக பெற்றுள்ளார். 

இந்நிலையில் எவ்வித தடைகளும் இன்றி ட்ரம்ப் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவி ஏற்கவுள்ளார். எனவே, நீண்டகாலமாக தொடர்ந்துக் கொண்டிருந்த ட்ரம்ப், ஹிலாரி மோதல் ஒருவகையாக முடிவு கண்டுள்ளது.

Leave a Reply