அமெரிக்க தேர்தலில் சீனா தலையிட முயற்சியா? டிரம்ப் குற்றச்சாட்டால் பரபரப்பு

அமெரிக்க தேர்தலில் சீனா தலையிட முயற்சியா? டிரம்ப் குற்றச்சாட்டால் பரபரப்பு

அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யா தலையிட்டதாக ஏற்கனவே குற்றச்சாட்டு உள்ளது. இந்த நிலையில் விரைவில் அமெரிக்காவில் நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் சீனா தலையிட முயற்சிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவில் வரும் நவம்பர் 6-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ளது. அதிபர் தேர்தல் போல் இல்லாமல் இந்த தேர்தலை எந்தவித குற்றச்சாட்டுக்களும் இல்லாமல் நடத்த அமெரிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

ஆனால் இந்த தேர்தலில் சீனா தலையிட முயற்சிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் குற்றம்சாட்டினார். இதுகுறித்து அவர் குறிப்பிடுகையில், “எங்கள் விவசாயிகள், பண்ணை தொழிலாளர்கள், தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்துவதின் மூலம், எங்கள் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துவதற்கு தீவிரமாக முயற்சிப்பதாக சீனா வெளிப்படையாகவே கூறி உள்ளது” என்று கூறினார்.

Leave a Reply