அமேசானில் ஆர்டர் செய்ய போறீங்களா? அதற்கும் ஆதார் எண் தேவை
ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் நிறுவனத்தில் இனிமேல் பொருட்களை ஆர்டர் செய்ய ஆதார் எண் தேவை என்று அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
ஆர்டர் செய்த பொருட்கள் தொலைந்துவிட்டால் எளிதில் அந்த பொருளை டிராக் செய்ய ஆதார் எண் பயன்படும் என்றும் அதனால் இனி ஆர்டர் செய்யும்போது ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டியது அவசியம் என்றும் அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆனால் அதே நேரத்தில் இதுவரை அரசு நிறுவனங்கள் மட்டுமே ஆதார் எண்ணை கட்டாயம் கேட்ட நிலையில் தற்போது தனியார் நிறுவனமான அமேசான் நிறுவனத்திற்கு ஆதார் எண்ணை அளிப்பது பாதுகாப்பானதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதுகுறித்து அரசு விளக்கமளிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.