அமேசான் பார்சலை பிரித்த பெண்ணுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி

அமேசான் பார்சலை பிரித்த பெண்ணுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி

தெற்கு இங்கிலாது பகுதியில் உள்ள பெண் ஒருவர் தனது மகளுக்கு கிறிஸ்துமஸ் பரிசு கொடுக்க அமேசான் மூலம் ஒரு கிண்டர் காலண்டரை ஆர்டர் செய்திருந்தார். அதற்குரிய பணத்தையும் அவர் ஆன்லைனில் முறையாக செலுத்திவிட்டார்

இந்த நிலையில் சமீபத்தில் அமேசான் ஊழியர்கள் அந்த பெண்ணிடம் பார்சலை அளித்துவிட்டு சென்றுவிட்டனர். மகளுக்காக வாங்கிய கிண்டர் காலண்டர் பார்சலை ஆசையுடன் மகளும் தாயும் பிரித்து பார்த்தபோது இருவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

ஏனெனில் அந்த கிண்டர் காலண்டரில் உள்ள சாக்லெட்டுக்கள் யாரோ சிலரால் ஏற்கனவே பாதி சாப்பிடப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் உடனடியாக அதனை புகைப்படம் எடுத்து பின்னர் அமேசான் நிர்வாகத்திடம் புகார் செய்தார். அமேசான் நிறுவனம் நடந்த தவறுக்கு மன்னிப்பு கோரியதோடு புதிய கிண்டர் காலண்டரை அனுப்பி வைப்பதாக தெரிவித்தது. இருப்பினும் அந்த பெண் இந்த விஷயத்தை தன் ஃபேஸ்புக்கில் பதிவு செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டார்

Leave a Reply