அமேசான், பிளிப்கார்ட் நிறுவனங்கள் மீது போர்: அம்பானியின் அதிரடி திட்டம்
சமீபத்தில் நடந்த முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்ற ரிலையன்ஸ் நிறுவனத்தின் முகேஷ் அம்பானி உலகின் மிகப் பெரிய புதிய வணிகத் தளம் ஒன்றினை உருவாக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்த வணிக தளம் அமேசான், பிளிப்கார்ட் நிறுவனங்களுக்கு பெரும் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தொடங்க இருக்கும் இந்தத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதிலிம் இருந்து 3 கோடி வணிகர்கள் பயன்பெறுவார்கள் என்றும் சிறு வணிகர்களாலும் மிகப் பெரிய நிறுவனங்கள் போன்று செயல்பட முடியும் என்றும் அதற்கான தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டு வருவதாகவும் முகேஷ் அம்பானி குறிப்பிட்டுள்ளார்.
அமேசான், பிளிப்கார்டு போன்ற இ-காமர்ஸ் நிறுவனங்கள் ஆன்லைன் வணிகங்களை மேற்கொண்டு வரும் நிலையில் ஆன்லைன் டு ஆப்லைன் வழியில் செயல்படும் புதிய வணிகமாக ரிலையன்ஸின் புதிய தளம் இருக்கும் என்றும் இந்த தளம் அமேசான், பிளிப்கார்டு மீது தொடுக்கப்படும் வணிகப்போராக இருக்கும் என்றும் கருதப்படுகிறது.