அமைச்சரின் வீட்டில் வருமான வரி சோதனை: பாஜக மீது முதல்வர் குற்றச்சாட்டு
கர்நாடக முதல்வர் குமாரசாமி நேற்று தேர்தல் பிரச்சாரம் ஒன்றில், ‘வருமான வரித்துறை அதிகாரிகளை கர்நாடகாவிற்கு வரவழைத்து, தேர்தல் நேரத்தில் சோதனை நடத்தி அரசியல் ரீதியாக பழி தீர்த்துக் கொள்ள பாஜக முயற்சிக்கிறது என பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த நிலையில் அவர் கூறியது போலவே நீர்ப்பாசனத்துறை அமைச்சர் சி எஸ் புட்டராஜுவின் வீடு மற்றும் அலுவலகங்களில் இன்று அதிகாலை முதல் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதேபோல அமைச்சரின் உறவினர் வீடுகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இது முழுக்க முழுக்க அரசியல் பழிவாங்கல் என அமைச்சரின் தரப்பினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.