அமைச்சர் விஜயபாஸ்கர் பதவி பறிப்பா?

அமைச்சர் விஜயபாஸ்கர் பதவி பறிப்பா?

தமிழக சுகாதாரத்துறை அமைச்சரின் மீது அடுக்கடுக்கான ஊழல் குற்றச்சாட்டுக்கள் இருந்து வரும் நிலையில் அவருடைய பதவி பறிக்கப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுகவின் ஊழல் இமேஜை போக்க, அமைச்சரின் விஜயபாஸ்கரின் பதவியை பறிக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முடிவு செய்திருப்பதாகவும், ஆனால் அவருடைய பதவி பறிக்கப்பட்ட ஏற்படக்கூடிய விளைவுகளை எப்படி சமாளிப்பது? என்று அவர் தீவிர ஆலோசனையில் இருப்பதாக கூறப்படுகிறது.

அதே சமயம் தனது பதவி பறிக்கப்பட்டால், தனது ஆதரவாளர்களுடன் அவர் டிடிவி தினகரன் கட்சியில் இணைய முடிவு செய்திருப்பதாகவும் அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

 

Leave a Reply