தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் சென்னையில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களிலும் விலையில்லா உணவு வழங்கப்படும் என்று தமிழக அரசு ஏற்கனவே அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தற்போது தீவிர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள சென்னையை சுற்றியுள்ள மாவட்டங்களிலும் உள்ள அம்மா உணவகங்களிலும் விலையில்லா உணவு வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கூறியுள்ளார்
நாளை முதல் ஜூலை 5ஆம் தேதி வரை சென்னையை சுற்றியுள்ள மாவட்டங்களில் உள்ள அம்மா உணவகங்களில் விலையில்லா உணவு வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்
இதனையடுத்து செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நாளை முதல் விலை உள்ள உணவு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது