அயர்னிங் இயந்திரம்
துணியை வெளுக்கும் சலவை இயந்திரங்களில், உடனடியாக உலர்த்தி தரும் இயந்திரங்கள்வரை வந்துவிட்டது. ஆனால் அயர்னிங் செய்வதுதான் அதைவிடவும் பெரிய வேலை. அதற்கும் தானியங்கி இயந்திரத்தை வடிமைத்துள்ளது அமெரிக்காவை சேர்ந்த ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனம். துணியை இந்த இயந்திரத்துக்குள் செலுத்தினால், ஒரு நிமிடத்தில் அயர்ன் செய்து, மடித்து வெளியே அனுப்பி விடுகிறது. பல துணிகளை அனுப்பினால் ஒவ்வொரு துணியாக மடித்து மொத்தமாகவும் வெளியே அனுப்புகிறது.
உலகின் நீளமான சுரங்க ரயில் பாதை
உலகின் மிக நீளமான சுரங்க ரயில் பாதை ஸ்விட்சர்லாந்தில் திறக்கப்பட்டுள்ளது. 35 மைல் நீளத்துக்கு, ஆல்ப்ஸ் மலைத் தொடரில் அமைந்துள்ள இந்த சுரங்க ரயில் பாதைக்கான பணிகள் 17 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. கடந்த வாரத்தில் இந்த சுரங்க ரயில் பாதை திறக்கப்பட்டுள்ளது. இதற்கு செலவான தொகை சுமார் ரூ.82 ஆயிரம் கோடிதான். திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் சுரங்கப் பணியாளர்கள்போல உடையணிந்து கலந்து கொண்டனர்.