அயர்லாந்து நாட்டில் கருக்கலைப்பு சட்டம் அமல்: இந்திய பெண்ணின் உயிர்தியாகத்திற்கு கிடைத்த வெற்றி
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான அயர்லாந்தில் கருக்கலைப்பு செய்வது சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது கருக்கலைப்பு குறித்து கடினமான சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்திய வம்சாவளி பல் மருத்துவர் சவிதா 2012ம் ஆண்டு கருக்கலைப்பு செய்ய முடியாததால் உயிரிழந்தார். இது அயர்லாந்து மக்களிடையே அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்திய நிலையில் தற்போது இந்த பெண்ணின் உயிர்த்தியாகத்திற்கு கிடைத்த வெற்றியாக இந்த சட்டம் பார்க்கப்படுகிறது.
கருக்கலைப்பு சட்டம் குறித்து மக்கள் எண்ணத்தை தெரிந்து கொள்ள சமீபத்தில் வாகெடுப்பு நடத்தப்பட்டது. இந்த வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் கருக்கலைப்புக்கு ஆதரவாக சுமார் 66 சதவீதம் பேர் வாக்களித்துள்ளதால் இந்த கடுமையான கருக்கலைப்பு தடைச்சட்டத்தை ரத்து செய்ய அரசு முடிவு செய்துள்ளது.
‘ஆறு வருட போராட்டத்திற்கு பின்னர் இந்த சட்டத்தை நீக்க அரசு முன்வந்துள்ளது. சவிதாவின் ஆத்மா இப்போது சாந்தியடைந்திருக்கும்’ என அவரது பெற்றோர்கள் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர்