அயல்நாடுகளில் மருத்துவம் படித்த மருத்துவர்கள்: அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்

அயல்நாடுகளில் மருத்துவம் படித்த தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவர்களை உடனடியாக பயிற்சி மருத்துவர்களாக தமிழ்நாடு அரசு வாய்ப்பு கொடுத்து இந்த கொரோனா காலத்தில் அவர்களை பயன்படுத்த வேண்டுமென முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது

அயல் நாடுகளில் மருத்துவம் படித்த, நம் தமிழ்நாட்டைச் சேர்ந்த சுமார் 850 பேர் பயிற்சி மருத்துவர்களாக பணியாற்ற தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்துள்ளனர். தற்போது, ஆண்டுக்கு சுமார் 250 பேர் மட்டுமே ஹவுஸ் சர்ஜன் பயிற்சிக்கு சேர்க்கப்படுகின்றனர்

இன்றைய கொரோனா நோய்த்தொற்றின் அவசர நிலையை கருத்திற்கொண்டு மீதமுள்ள சுமார் 600 இளம் மருத்துவர்களுக்கு , உடனடியாக அரசு மருத்துவமனைகளில் பயிற்சி மருத்துவர்களாக பணியாற்றிட தமிழ்நாடு அரசு வாய்ப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்