அயோத்தி நிலப் பிரச்னை: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

அயோத்தி நிலப் பிரச்னை: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

அயோத்தி நிலம் தொடர்பான பிரச்னையை தீர்க்க மத்தியஸ்தர்களை நியமிப்பது தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி சற்றுமுன்னர் இந்த வழக்கின் தீர்ப்பு அளிக்கப்பட்டது

உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் தொடர்பான வழக்கை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம், கடந்த 2010ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. அதில், மனுதாரர்களான சன்னி வக்பு வாரியம், நிர்மோஹி அகாரா மற்றும் ராம் லாலா அமைப்புகளும் நிலத்தை பிரித்துக் கொள்ள நீதிமன்றம் யோசனை வழங்கியது. ஆனால், தீர்ப்பை எதிர்த்து 3 தரப்பினரும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். மொத்தம் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் முன்னதாக தலைமை நீதிபதி அமர்வில் விசாரிக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று வழங்கப்பட்ட தீர்ப்பின்படி அயோத்தி நிலப் பிரச்னையை நீதிமன்றம் நியமிக்கும் மத்தியஸ்தர்கள் மூலம் தீர்க்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அயோத்தி நிலப் பிரச்னையை நீதிமன்றம் நியமிக்கும் மத்தியஸ்தர்கள் மூலம் தீர்க்க உச்சநீதிமன்றம் உத்தரவு ஒய்வுபெற்ற நீதிபதி கலிஃபுல்லா தலைமையிலான மத்தியஸ்தர் குழு அயோத்தியில் சமரசம் செய்யும்;மத்தியஸ்தர் குழு ஒரு வாரத்தில் பேச்சுவார்த்தையை தொடங்கி 8 வாரங்களில் முடிக்கஉத்தரவு

 

Leave a Reply