அயோத்தி வழக்கில் மத்தியஸ்தர்கள் மூலம் தீர்வு: சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பு
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய பகுதியில் உள்ள் ராமஜென்ம பூமி, பாபர் மசூதி நிலம் யாருக்கு சொந்தம் என்பதற்கான விடை பல் ஆண்டுகளாக கிடைக்கவில்லை என்பதால் அந்த பகுதியில் எப்போதும் ஒருவித பதட்டம் இருந்து வரும்
இந்த நிலையில் இதுகுறித்த வழக்கு ஒன்றை அலகாபாத் ஐகோர்ட் விசாரித்து, வந்தது. இந்த வழக்கில் சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா மற்றும் ராம் லல்லா ஆகிய 3 தரப்பினரும் சமமாக பிரித்துக்கொள்ள வேண்டும் என 2010-ம் ஆண்டு தீர்ப்பு அளிக்கப்பட்டது ஆனால் இந்த தீர்ப்பை எதிர்த்து பல்வேறு தரப்பினரும் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். இந்த மேல்முறையீட்டு வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரணை செய்தது.
இந்த நிலையில், மத்தியஸ்தர்கள் மூலம் தீர்வு காண வழி உண்டா என்ற கேள்வியை சுப்ரீம் கோர்ட் எழுப்பியது. இதை நிர்மோகி அகாரா தவிர்த்த பிற இந்து அமைப்புகள் எதிர்க்கின்றன. முஸ்லிம் அமைப்புகள் ஏற்கின்றன.
இதுகுறித்த் தீர்ப்பு இன்று சுப்ரீம் கோர்ட் வழங்குகிறது. இன்றைய தீர்ப்பில் அயோத்தி பிரச்சினையில் மத்தியஸ்தர்களை நியமித்து, இணக்கமான தீர்வு காண்பதற்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி வழிவகுக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்