அய்யாக்கண்ணுக்கு ஆதரவு கொடுத்த ஸ்டாலின், கமல் மெளனம் ஏன்?

அய்யாக்கண்ணுக்கு ஆதரவு கொடுத்த ஸ்டாலின், கமல் மெளனம் ஏன்?

மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் கடந்த சில ஆண்டுகளாக கடுமையாக விமர்சனம் செய்த விவசாயிகள் சங்கத்தலைவர் அய்யாக்கண்ணுவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனும் மாறி மாறி ஆதரவு தெரிவித்தனர்.

ஆனால் நேற்று திடீரென அமித்ஷாவை சந்தித்த அய்யாக்கண்ணு, பாஜகவுக்கு தனது ஆதரவை தெரிவித்தார். இதனையடுத்து அய்யாக்கண்ணுவுக்கு ஆதரவளித்து வந்த ஸ்டாலினும், கமல்ஹாசனும் இதுகுறித்து பிரச்சார கூட்டங்களில் வாய்திறக்க மறுத்து மெளனமாகியுள்ளனர்.

மோடியையும் பாஜகவையும் எதிர்ப்பவர்களுக்கு மட்டுமே ஆதரவு என்ற நிலையில் உள்ள இருவரும் இதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

Leave a Reply