அரசிதழில் காவிரி மேலாண்மை ஆணையம்: தமிழக விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி
காவிரி மேலாண்மை ஆணையம் மத்திய அரசின் அரசிதழில் அதிகாரபூர்வமாக வெளியிட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் உறுதி செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியபோது, ‘காவிரி மேலாண்மை ஆணையம் குறித்த அறிவிப்பை அரசிதழில் வெளியிட மத்திய அரசு உத்தரவிட்டு இருப்பதாகவும், இதற்கான அறிவிப்பில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்காரி கையொப்பம் இட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
காவிரி ஆணையம் குறித்த அறிவிப்பை அரசிதழில் வெளியிடாமல் மத்திய அரசு கடந்த சில மாதங்களாக காலந்தாழ்த்திய நிலையில் சுப்ரீம் கோர்ட் உத்தரவின் அடிப்படையில் தற்போது அரசிதழில் வெளியிட்டுள்ளது. இதனால் தமிழக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.