அரசினர் தொழில்நுட்ப பாலிடெக்னிக் கல்லூரியில் ஆய்வக உதவியாளர் பணி

அரசினர் தொழில்நுட்ப பாலிடெக்னிக் கல்லூரியில் ஆய்வக உதவியாளர் பணி

5
திருச்சி ஸ்ரீரங்கம் சேதுராப்பட்டியில் செயல்பட்டு வரும் அரசினர் தொழில்நுட்ப பாலிடெக்னிக் கல்லூரியில் காலியாக உள்ள 19 திறன்மிகு, ஆய்வக உதவியாளர்கள் பணியிடங்களை நிரப்ப 36 வயதுக்கு உட்பட்ட தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 19
பதவி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பதவி: Skilled / Lab Assistant (Mechanical Engineering) – 09
பதவி: Skilled / Lab Assistant (Computer Science Engineering) – 02
பதவி: Skilled / Lab Assistant (Electronics and Communication Engineering) – 02
பதவி: Skilled / Lab Assistant (Civil Engineering) – 03
பதவி: Skilled / Lab Assistant (Electrical and Electronics Engineering) – 03
சம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200 + தர ஊதியம் ரூ.2,400
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் மற்றும் ITI,NTC கண்டிப்பாக தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். NAC தேர்ச்சி பெற்றிருந்தால் கூடுதல் கல்வித் தகுதியாக கருதப்படும்.
வயதுவரம்பு: 01.07.2016 தேதியின்படி 18 – 36க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.gptcsrirangam.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, தெளிவாக பூர்த்தி செய்து 10ம் வகுப்பு மதிப்பெண் சான்று, ஐடிஐ,என்டிசி சான்று என்ஏசி சான்று மற்றும் சாதி சான்று ஆகியவற்றின் நகல்களுடன் விண்ணப்பிக்கும் பதவியின் பெயரை தெளிவாக குறிப்பிட்டு தங்களது முகவரி மற்றும் அலைபேசி எண் ஆகியவற்றை தெளிவாக குறிப்பிட்டு இத்துடன் இணைக்கப்பட்ட விண்ணப்ப மாதிரிப் படிவத்தில் விவரங்களை பூர்த்தி செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய அஞ்சல் முகவரி:
முதல்வர்,
அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி,
ஸ்ரீரங்கம் சேதுராப்பட்டி, திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலை, திருச்சி – 620 012
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 30.09.2015 அன்று மாலை 5.45 மணிக்குள் சென்று சேர வேண்டும். அதன்பிறகு வந்து சேரும் விண்ணப்பங்கள் ஏற்று கொள்ளப்பட மாட்டாது.
எழுத்து தேர்வு தேதி குறித்த விவரங்கள் www.gptcsrirangam.com என்ற இணையதளத்தில் மட்டுமே பின்னர் வெளியிடப்படும்.
மேலும் விவரங்கள் அறிய http://www.gptcsrirangam.com/Documents/labasstrec.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Leave a Reply