அரசியல்வாதிகளும், மாணவர்களும் பார்க்க வேண்டிய படம் மெர்சல்: இலங்கை அமைச்சர்
இலங்கையில் உள்ள அரசியல்வாதிகள், மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள் அனைவரும் ‘மெர்சல்’ படம் பார்க்க வேண்டும் என்று இலங்கை அமைச்சரும், முன்னாள் நடிகருமான ரஞ்சன் ராமநாயக்க கருத்து தெரிவித்துள்ளார்.
‘மெர்சல்’ படம் குறித்து கருத்து தெரிவிக்காத தமிழக அரசியல்வாதிகளே இல்லை என்று கூறலாம். அதேபோல் ராகுல்காந்தி உள்பட பல தேசிய அரசியல்வாதிகளும் மெர்சல் குறித்து பேசிவிட்டனர்.
இந்த நிலையில் இலங்கை அமைச்சர் ரஞ்சன் சமீபத்தில் பேட்டியளித்தபோது, ‘இலங்கையில் உள்ள அரசு மருத்துவமனைகள் வளா்ச்சிபெற வேண்டுமானால் இலங்கையில் உள்ள அரசியல்வாதிகள், மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள் அனைவரும் மெர்சல் படத்தை பார்க்க வேண்டும். அரசு மருத்துவமனைகள் வளா்ச்சிப்பெற வேண்டுமெனில் அதிபா், பிரதமா், சுகாதாரத்துறை அமைச்சா் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினா்கள் அரசு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும்’ என்று கூறினார்.
https://twitter.com/Vicky_VjMsd/status/923414997870317568