அரசியல்வாதிகள் வெடிக்கலாம், பொதுமக்கள் வெடிக்க கூடாதா? சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு பட்டாசு வியாபாரிகள் கேள்வி

அரசியல்வாதிகள் வெடிக்கலாம், பொதுமக்கள் வெடிக்க கூடாதா? சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு பட்டாசு வியாபாரிகள் கேள்வி

சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதன் காரணமாக டெல்லியில் பட்டாசு வெடிக்க சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது. இதனால் தீபாவளி விற்பனைக்காக லட்சக்கணக்கில் பட்டாசுகளை வாங்கி வைத்திருக்கும் பட்டாசு வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

நாங்கள் அரசுக்கு 28% வரி செலுத்தி பட்டாசுகளை வாங்கி வைத்துள்ளோம். அரசுக்கு முறையாக வரி செலுத்திய ஒரு பொருளை விற்பனை செய்யக்கூடாது என்று நீதிமன்றம் கூறுவது எந்த விதத்தில் நியாயம். அப்படியானால் நாங்கள் கட்டிய வரியை திருப்பி கொடுக்க உத்தரவிட வேண்டும்

தேர்தல் வெற்றியின்போது அரசியல்வாதிகளும் தொண்டர்களும் பட்டாசு வெடிக்கும்போது அனுமதிக்கும் நீதிமன்றம் பொதுமக்கள் வருடத்தில் ஒரே ஒரு நாள் வெடிப்பதை தடை செய்வது நியாயமா? என்றும் பட்டாசு வியாபாரிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். குறைந்தபட்சம் வாங்கி வைத்திருக்கும் பட்டாசுகளையாவது விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று பட்டாசு வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்

Leave a Reply