அரசியல் கட்சிகளிடம் சிக்கிய ராமரும் சிவனும்
வரும் 2019ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலை சந்திக்க இரண்டு பெரிய தேசிய கட்சிகளான பாஜகவும், காங்கிரசும் கடவுள்களை கையிலெடுக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
ஏற்கனவே பாஜக ராமர் கோவிலை கட்டியே தீருவோம் என்று கூறி வரும் நிலையில் காங்கிரஸ் கட்சி அதற்கு போட்டியாக சிவனை குறிவைத்துள்ளது. ராகுல்காந்தி சமீபகாலமாக நெற்றியில் குங்குமம் இட்டு சிவபக்தரைப் போலவே காணப்படுகிறார்.
இந்த நிலையில் இந்த இரு கட்சிகளுக்கு போட்டியாக சமாஜ்வாடி கட்சியும் கடவுள் பக்கம் கவனம் செலுத்த தொடங்கியது. இந்த கட்சி விஷ்ணு கோவில் கட்டுவோம் என்று அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறுகையில், கம்போடியாவில் உள்ள அங்கோர் வாட் கோவில் போல் உத்தரப்பிரதேசத்தில் பிரமாண்டமான விஷ்ணு கோவில் கட்டுவோம் என்று உறுதி அளித்துள்ளார். கட்சிகளின் இந்த நடவடிக்கைகள் வருகிற பாராளுமன்ற தேர்தலில் புதிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.