அரசியல் ரஜினி குறித்து அச்சம் ஏற்படுகிறது. பா.ரஞ்சித்

அரசியல் ரஜினி குறித்து அச்சம் ஏற்படுகிறது. பா.ரஞ்சித்

ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி’ மற்றும் ‘காலா’ ஆகிய இரண்டு படங்களை இயக்கிய இயக்குனர் பா.ரஞ்சித், இந்த இரண்டு படங்களில் தன்னுடைய சொந்த கருத்துக்களை ரசிகர்களிடம் திணித்தார். இந்த இரண்டு படங்களும் ரஜினி ரசிகர்களுக்கு உண்டான படங்களாக இல்லாமல் தனது சொந்தக்கருத்தை தெரிவிக்கும் களமாக ரஞ்சித் பயன்படுத்தி கொண்டதாக ரசிகர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் ரஜினிக்கு உள்ள மக்கள் மீதான அக்கறை, ஓட்டு அரசியலை முன்னெடுக்கும் மற்ற அரசியல்வாதிகளின் அக்கறையைப் போன்று, பொது அக்கறையாக மாறிவிடுமோ? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாக இயக்குனர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார். சமீபத்தில் தான் தயாரித்த ‘பரியேறும் பெருமாள்’ படத்தை கமல்ஹாசன் பாராட்டியதை அடுத்தே அவர் ரஜினி குறித்து இந்த அச்சத்தை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சாதி ஒழிப்பு தான் என் கனவு என்றும் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார். தனது படங்களில் சாதியை மட்டுமே முன்னிறுத்தும் ரஞ்சித், சாதி ஒழிப்பு குறித்து பேசுவது வேடிக்கையாக இருப்பதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

Leave a Reply