கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்த ஆண்டு முதல் முறையாக இணையதளம் மூலம் அரசு கல்லூரிகளுக்கு விண்ணப்பம் பதிவு செய்யப்பட்டது
இதன்படி இணையதளத்தின் மூலம் 3.12 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்ததாகவும், அதில் 2.2 லட்சம் பேர் மட்டுமே விண்ணப்பக் கட்டணம் செலுத்தியதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
முதல்கட்ட மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 14ஆம் தேதி வரை நடைபெற்றது இதில் தர வரிசையில் முன்னிலையில் இருந்த பல மாணவர்களுக்கு கல்லூரிகளில் இருந்து அழைப்பு வரவில்லை என பெற்றோர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது
முதல்கட்ட மாணவர் சேர்க்கையில் 60 சதவீத இடங்களை நிரப்பபட்டுள்ளதாகவும் ஒருசில கல்லூரிகளில் 40 சதவிகிதத்திற்கும் குறைவான இடங்களே நிறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுவதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது