அரசு கல்லூரியில் பிடிபட்ட 12 அடி நீள பாம்பு: உபியில் பரபரப்பு
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் 12 அடி நீள பாம்பு ஒன்று பிடிபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அலகாபாத் நகரில் டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜி அரசு கல்லூரி உள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த கல்லூரியின் வளாகத்தில் பாம்பு ஒன்று நடமாடுவதாக மாணவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் பாம்பு பிடிக்கும் பயிற்சி பெற்ற ஒருவர் வரவழைக்கப்பட்டார். அவர் கல்லூரி வளாகத்தில் சுற்றித்திரிந்த 12 அடி நீள பாம்பை லாவகமாக பிடித்தார். பின்னர் அந்த பாம்பு காட்டுப்பகுதிக்குள் விடப்பட்டது.
கல்லூரி வளாகத்தில் 12அடி நீள பாம்பு பிடிபட்டதால் மாணவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.