அரசு டாக்டர் என ஏமாற்றி திருமணம்: இரண்டு நாள் கழித்து தர்ம அடி கொடுத்த மணமகள் வீட்டார்

அரசு டாக்டர் என ஏமாற்றி திருமணம்: இரண்டு நாள் கழித்து தர்ம அடி கொடுத்த மணமகள் வீட்டார்

அரசு மருத்துவர் என பொய் சொல்லி வசதியான வீட்டுப்பெண் ஒருவரை திருமணம் செய்த இளைஞருக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடந்தபோது குட்டு உடைந்ததால் அவருக்கு தர்ம அடி கிடைத்துள்ளது.

சென்னை வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவர் தினமும் டாக்டர் போன்ற உடையில் சொகுசு காரில் சென்று வந்தார். அவரது காரில் அரசு மருத்துவர் என்று எழுதி இருந்ததால் அவர் அரசு மருத்துவமனையில் பணிபுரிவதாக அந்த பகுதியில் உள்ளவர்கள் நினைத்தனர்

இதனையடுத்து அந்த பகுதியை சேர்ந்த ஒரு பணக்கார வீட்டினர் கார்த்திக்கின் நடவடிக்கைகளைப் பார்த்து அவருக்கு தங்கள் பெண்ணை திருமணம் செய்து கொடுக்க முன்வந்தனர். மணமகனின் பின்புலம் குறித்து சரியாக விசாரிக்காத அந்த குடும்பத்தினர் தங்கள் மகளை கார்த்திக்கு திருமணம் செய்து கொடுத்தனர்

திருமணம் முடிந்து இரண்டு நாள் கழித்து வரவேற்பு நிகழ்ச்சி நடக்கும்போது கார்த்திக்கின் உறவினர் ஒருவர் திருமண மண்டபத்தில் வந்து போதையில் குட்டை உடைத்து விட்டார். அப்போதுதான் கார்த்திக் அரசு மருத்துவர் இல்லை என்பதும் வேலையே இல்லாமல் வெட்டியாக இருப்பவர் என்றும் தெரியவந்தது. இதனையடுத்து மணமகள் வீட்டார் கடும் அதிர்ச்சி அடைந்து கார்த்திக்கு தர்ம அடி கொடுத்து பின்னர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Leave a Reply